பொன்.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்
வேட்பு மனு தாக்கல்
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார்.
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வேட்பு மனுத்தாக்கல் இன்று முதல் சூடு பிடித்துள்ளது. வேட்பு மனு நாளை மறுநாள் முடிய உள்ள நிலையில் இன்று குமரி கலெக்டர் அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அதன் வேட்பாளர் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன், மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் ஸ்ரீதரிடம் வேட்பு மனுவை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் தர்மராஜ், நாகர்கோவில் எம் எல் ஏ , எம். ஆர் காந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story