கடல் சீற்ற பகுதிகளில் பார்வையிட்ட பொன் ராதாகிருஷ்ணன்

கடல் சீற்ற பகுதிகளில் பார்வையிட்ட பொன் ராதாகிருஷ்ணன்

அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆய்வு 

கன்னியாகுமரியில் ஏற்ப்பட்ட கடல் சீற்றத்தால் கடல்நீர் ஊருக்குள் புகுந்ததை அடுத்து அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

கன்யாகுமரி மாவட்டம், கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட இரயுமன்துறையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட திடீர் கடல் சீற்றத்தால் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. இதில் பாதிப்பிற்குள்ளான பகுதிகளையும் மக்களையும் முன்னாள் மத்திய அமைச்சரும், கன்யாகுமரி பாராளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளருமான தபொன் ராதாகிருஷ்ணன் நேற்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

பின்னர் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரணமும் நிரந்தர தீர்வையும் ஏற்படுத்தி கொடுக்க கேட்டுக் கொண்டார்கள். உடன் பாஜக மீனவரணி மாவட்ட தலைவர் ஆன்டனி மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

Tags

Next Story