பொங்கல் தொகுப்பு டோக்கன் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

பொங்கல் தொகுப்பு டோக்கன் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

டோக்கன் வழங்கிய மாவட்ட ஆட்சியர் 

திருப்பத்தூரில் பொங்கல் தொகுப்பு டோக்கனை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் வழங்கினார்.

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி எதிரே உள்ள பகுதியில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கி துவக்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கரபாண்டியன் 2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசாக ரொக்க பணம் ரூ.1000 ரூபாய் 1 கிலோ பச்சரிசி சர்க்கரை மற்றும் முழுக் கரும்பு உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 07.012024 முதல் 09.012024 டோக்கன்கள் விநியோகம் செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் ஆய்வு செய்தார் ஆய்வின் போது திருப்பத்தூர் மாவட்டத்தில் 293360 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை உரிய முறையில் வழங்கிட அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் போதிய இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் 07.012024 முதல் 09012024 வரை மூன்று நாட்களுக்கு நியாய விலை அங்காடிப் பணியாளர்கள் மற்றும் கூடுதல் பணியாளர்கள் ஆகியோர்களால் தகுதியுள்ள பயனாளிகள் அனைவருக்கும் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கிட போதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், தமிழக முதல்வரால் 10.012024 அன்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி துவக்கி வைக்கப்பட்டதும் மாவட்டத்தின் அனைத்து நியாய விலை அங்காடிகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் பொது மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் சம்பந்தப்பட்ட அங்காடிக்கு சென்று தமிழக அரசின் பொங்கல் பரிசினை பெற்றுக்கொள்ளவும் இதனால் கூட்ட நெரிசலை தவிர்க்கலாம் எனவும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த காவல் துறை மூலமாக போதிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

Tags

Next Story