பொங்கல் பண்டிகை: விழுப்புரத்தில் 1,629 சிறப்பு பஸ்கள் இயக்கம்

பொங்கல் பண்டிகை: விழுப்புரத்தில் 1,629 சிறப்பு பஸ்கள் இயக்கம்

விழுப்புரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1,629 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 

விழுப்புரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1,629 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு வெளியூர் களில் தங்கியிருந்து வேலை பார்த்து வருபவர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட, சொந்த ஊருக்கு செல்வார்கள். இதனால் அரசு பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. எனவே பொதுமக்களின் வசதிக்காக நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 14-ந் தேதி வரை சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் அமைக்கப்பட உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து பிற ஊர்களுக்கு செல்ல ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் கூடுதலாக நாளை 539 சிறப்பு பஸ் களும், 13, 14-ந் தேதிகளில் 1,090 சிறப்பு பஸ்களும் திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர், ஓசூர், வேலூர், ஆரணி, திருப்பத்தூர், புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் பயணிகள் சிதம்பரம், தர்மபுரி, ஓசூர், நெய்வேலி, புதுச்சேரி, சேலம், திருவண்ணாமலை, திருச்சி, வேலூர் ஆகிய ஊர்களுக்கு செல்ல https://www.tnstc.in/home.html இணையத்தில் முன் பதிவு செய்து இந்த சிறப்பு பஸ்களை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் பயணிகள் கூட்டம் குறையும் வரை தேவைக்கு ஏற்ப பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யவும், பஸ் இயக்கத்தை மேற்பார்வையிடவும் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

Tags

Next Story