துத்தூக்குடி விசாகா பள்ளியில் பொங்கல் விழா

துத்தூக்குடி விசாகா பள்ளியில் பொங்கல் விழா

பொங்கல் வைத்த மாணவிகள்

தூத்துக்குடி விகாசா பள்ளியில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் பண்டிகை உற்சாகமாடினர்.

பொங்கல் பண்டிகை வருகிற 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவிகள் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் தூத்துக்குடியில் உள்ள விகாசா இன்டர்நேஷனல் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் சார்பில் இன்று காலை பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது பொங்கல் விழாவை முன்னிட்டு நெல்லை சீமையிலே என்ற தலைப்பில் மன்னர் காலங்களில் பொங்கல் நடந்ததை போன்று மன்னர் வேடத்தில் மாணவர்கள் அமர்ந்திருக்க பாரம்பரியமான வேஷ்டி சேலை பாவாடை தாவணி அணிந்து வந்திருந்த பள்ளி மாணவ மாணவிகள் பாரம்பரிய முறைப்படி பித்தளை பானைகளில் அரிசி பொங்கல் மற்றும் சர்க்கரைப் பொங்கல் வைத்து கொண்டாடினர்.

இதை அடுத்து பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற கரகாட்டம் ஒயிலாட்டம் மயிலாட்டம் சிலம்பாட்டம் பறையாட்டம் முரசு ஒளி எழுப்புதல் சூருள்வாள் வீச்சு வாழ்வீச்சு மான்கொம்பு சண்டை சிலம்பு சண்டை தீ பந்தம் சுற்றல் உள்ளிட்ட பாரம்பரிய நடனம் மற்றும் வீர விளையாட்டுகளை செய்து காண்பித்து அசத்தினர்.

மாணவ மாணவிகளின் இந்த பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை ஆசிரியர்கள் பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரும் கண்டு ரசித்தனர்

Tags

Next Story