குருவன்கோட்டையில் பொங்கல் விழா

குருவன்கோட்டையில் பொங்கல் விழா
குருவன்கோட்டையில் பொங்கல் விழா நடைபெற்றது
குருவன்கோட்டையில் பொங்கல் விழா நடைபெற்றது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே குருவன்கோட்டை கிராமத்தில் மாா்கழி பொங்கல் ஆண்டு தோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, கிராம மக்களில் பெரும்பாலானோா் குறிப்பாக பெண்கள், ஒரு வாரத்திற்கு முன்பாகவே விரதம் இருந்து வந்தனா்.

இளைஞா்கள், இளம்பெண்கள், பெரியவா்கள் என அனைவரும் ஒன்று சோ்ந்து கிராமத்தில் உள்ள அனைத்துத் தெருக்களையும் அலங்கரித்து தெருக்கள் சந்திக்கும் இடங்களில் பந்தலிட்டு பந்தலில் மஞ்சள், கரும்பு தோரணங்கள் கட்டி, ஒவ்வொரு தெரு சந்திப்பிலும் அந்த தெருவில் வசிக்கும் அனைவரும் ஒன்று கூடி பொங்கலிட்டு அதே இடத்தில் அம்மனை வழிபட்டனா்.

கிராமத்தில் சுமாா் 30 இடங்களில் இந்த பொங்கல் வழிபாடு நடைபெற்றது. றது. அது முதல் ஆண்டு தோறும் மாா்கழி மாதம் 3 வது செவ்வாய்க்கிழமை பொங்கலிட்டு அம்மனுக்குப் படைக்கும் விழா நடைபெறுகிறது என கிராம மக்கள் கூறுகின்றனா்.

Tags

Next Story