காங்கயம் பேட்டை மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா

திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் பேட்டை மாரியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற பேட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா பெரும் விமர்சையாக நடைபெற்று வருகிறது. காங்கயம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் இருந்து ஆயிரம் கணக்கில் பொதுமக்கள் பெருமளவில் வந்து கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து வருகின்றனர். நேற்று முன்தினம் துவங்கிய இந்த திருவிழா முதல் நாள் நிகழ்ச்சியாக பல ஊர்களில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டது.

2ஆம் நாளான நேற்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூ வடம் எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது. அந்த வகையில் நேற்று திருவிக நகரில் உள்ள ஸ்ரீ முத்துசாமி கோவில் இருந்து பொதுமக்கள் பூ வடம் எடுத்து கொண்டு திருப்பூர் சாலை வழியாக காங்கயம் பேருந்து நிலையம், காங்கயம் ரவுண்டானா பகுதி சுற்றி மீண்டும் பேட்டை மாரியம்மன் கோவிலை அடைந்தனர். இதனை நேற்று மதியம் பொங்கல் விழாவும், இரவு மாவிளக்கு நிகழ்ச்சியும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 3வது நாள் வியாழக்கிழமை இன்று திருவிழா முடிவடைகிறது.

Tags

Read MoreRead Less
Next Story