திருப்பூரில் 500 கிடாய்களை வெட்டி அசைவ அன்னதானம்

திருப்பூரில் முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 500 கிடாய்களை வெட்டி அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது.

திருப்பூரில் 500 கிடாய்களை வெட்டி அசைவ அன்னதானம் - முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகாவிற்கு உட்பட்ட தொரவலூர் பகுதியில் அருள்மிகு கோட்டை முனியப்ப சாமி திருக்கோயில் இருந்து வருகிறது. அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் 200 ஆண்டுகளுக்கு மேலாக பொங்கல் திருவிழா பங்குனி மாதம் நடைபெறுவது வழக்கம்.

அதனை முன்னிட்டு இந்த வருடம் பொங்கல் திருவிழா இன்று நடைபெற்றது. கடந்த 18ஆம் தேதி சாமி சாட்டுதல் நிகழ்வுடன் பொங்கல் திருவிழா தொடங்கப்பட்ட நிலையில் திங்கட்கிழமை சுவாமி கண் திறப்பு மற்றும் கோவில் புகுதல் நிகழ்வு நடைபெற்றது. முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை நடைபெற்றது.

இதில் பரவலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். கோவிலுக்கு நேர்த்தி கடன் செலுத்தும் வகையில் 500க்கும் மேற்பட்ட கிடாய்களை பக்தர்கள் வழங்கி இருப்பதாகவும் இதில் கோவில் அன்னதானத்திற்கு 150க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்பட்டு 15 ஆயிரம் பேருக்கு அசைவ அன்னதானம் வழங்கப்பட இருப்பதாகவும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வெள்ளிக்கிழமை மறுபூஜையும் சைவ அன்னதானமும் வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story