தாண்டிகுடி போலீஸ் ஸ்டேஷனில் பொங்கல் விழா

தாண்டிகுடி போலீஸ் ஸ்டேஷனில் பொங்கல் விழா

காவல் நிலையத்தில் பொங்கல் விழா

தாண்டிகுடி போலீஸ் ஸ்டேஷனில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம், தாண்டிக்குடி போலீஸ் ஸ்டேஷனில் பொங்கல் விழா நடந்தது. நாள் முழுவதும் வழக்கு விசாரணை ,பாதுகாப்பு என அலைந்து திரிந்த போலீசார் திடீரென பொங்கல் விழாவை கொண்டாடியது பொது மக்களிடம் மகிழ்ச்சி ஏற்படுத்தியது.

இவர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து பொங்கல் விழாவை கொண்டாடினர். போலீசார் ஒருவருக்கு ஒருவர் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். பின்பு பொங்கல், கரும்பு, தேங்காய் உட்பட பழங்களை வைத்து அனைவரும் உண்டு மகிழ்ந்தனர்.

மலைப்பகுதி என்பதால் நேற்று மாலையில் இந்த பொங்கல் விழா நடந்தது. இன்று மாட்டுப் பொங்கல் என்பதால் பாதுகாப்பு பணிக்கு செல்ல வேண்டும் என போலீசார் பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர்.

Tags

Next Story