மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பொங்கல் விழா
திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பொங்கலை காவலர்கள் கொண்டாடினர்.
திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பொங்கல் விழா நடந்தது. இன்ஸ்பெக்டர் அமுதா குத்து விளக்கேற்றி பொங்கல் விழாவை துவக்கி வைத்தார். இதில் பெண் போலீசார் புத்தாடை அணிந்து பங்கேற்றனர். பின்பு பொங்கல் வைத்து அனைவரும் உண்டு மகிழ்ந்தனர். பெண் போலீசார் ஆடி பாடி மகிழ்ந்தனர். பொங்கல் விழா 24 மணி நேரம் பணிக்கு இடையில் கொண்டாடியது மகிழ்ச்சியாக உள்ளது. அனைத்து தரப்பு மக்களும் கவலை மறந்து கஷ்டங்களை துறந்து பொங்கல் விழாவை கொண்டாட வேண்டும் என தெரிவித்தனர். போலீஸ் ஸ்டேஷன் வழக்குக்காக வந்தவர்களுக்கு பொங்கல் கொடுத்தும் பழங்கள் தேங்காய் பூ கொடுத்தும் வரவேற்றனர்.
Next Story