அரவக்குறிச்சி வள்ளுவர் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்
நடனமாடும் மாணவிகள்
தமிழர் திருநாளில் முதன்மை திருநாளாக பொங்கல் விழா பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்கள், பொங்கல் விழாவை அவரவர் வசிக்கும் பகுதியில் நமது பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக, தமிழர்கள் பண்டைய காலம் தொட்டு கொண்டாடி வருகின்றனர்.
சமீபகாலமாக இந்த பண்பாட்டு கலாச்சாரம், கல்லூரி மாணவ- மாணவியரிடமும் பரவலாக காணப்படுகிறது. இதனால், ஆண்டுதோறும் கல்லூரிகளிலும் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. ஆண்டு முழுவதும் நாகரீக ஆடைகள் அணிந்து கல்லூரிக்கு சென்றபோதும், பண்பாட்டு திருவிழாவுக்கு பாரம்பரியமிக்க வேஷ்டி,சேலை அணிந்து மாணவ- மாணவியர்கள் கல்லூரி வளாகத்தில் பொங்கல் விழாவை கொண்டாடுவது சமீபகால வழக்கமாக உள்ளது.
இதன் அடிப்படையில் கரூர் மாவட்டம், புத்தாம்பூர் பகுதியில் செயல்படும் வள்ளுவர் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில், கல்லூரியின் தாளாளர் செங்குட்டுவன் தலைமையில், கல்லூரி மாணாக்கர்கள் பொங்கல் விழாவை கொண்டாடினர்.
அப்போது, மாணவ- மாணவியர் நமது பண்பாட்டு கலாச்சார உடைகளை அணிந்து கலாச்சார நடனத்தை ஆடி பொங்கல் விழாவை வெகு விமர்சையாக கொண்டாடினார்.