பஹ்ரைன் நாட்டில் பொங்கல் திருநாள் விழா

பஹ்ரைன் நாட்டின் மனாமா பகுதியில் பொங்கல் திருநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

தமிழர் திருநாளாம் பொங்கல் விழா பஹ்ரைன் நாட்டின் மனாமா பகுதியில் சிறப்புற கொண்டாடப்பட்டது.

லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ் (சமூக உதவி இயக்கம்) சார்பாக, குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்கள் விடுதியில், இரவு உணவுப் பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் இனிப்புகள் விநியோகம் செய்யப்பட்டது. பஹ்ரைனைச் சுற்றியுள்ள குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்களுக்கு சமைத்த உணவுகள், உலர் உணவுகள் மற்றும் சிற்றுண்டிகளை இலவசமாக வழங்குவதற்காக லைட்ஸ் ஆஃப் கிண்ட்னஸ் (சமூக உதவி இயக்கம்) இன் 'ரீச் தி அன்ரீச்ட்' முயற்சியின் ஒரு பகுதியாகும். இந்த விநியோகத்தில் லைட்ஸ் ஆஃப் கைன்ட்ஸின் பிரதிநிதிகள் சையத் ஹனீஃப், ஆதம் இப்ராஹீம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story