பேராவூரணி, அதிராம்பட்டினத்தில் பொங்கல் விழா 

பேராவூரணி டாக்டர் ஜே.ஸி. குமரப்பா செண்டினரி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் பல்வேறு கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

லயன்ஸ் இயக்கத்தின் நிறுவனர் மெல்வின் ஜோன்ஸ் பிறந்த நாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில், "பசிப்பிணி போக்குவோம்" திட்டத்தின் கீழ், 150 ஆதரவற்ற ஏழைகளுக்கு மதிய உணவாக சனிக்கிழமையன்று பிரியாணி வழங்கப்பட்டது. நிகழ்வில், லயன்ஸ் சங்க தலைவர் குப்பாஷா அகமது கபீர், செயலாளர் ஹாஜா நசிருதீன், பொருளாளர் பேரா நியாஸ் அகமது, சாசனத் தலைவர் பேரா முகமது அப்துல் காதர், மாவட்டத் தலைவர்கள் ஜலீலா முகைதீன், பேரா செய்யது அகமது கபீர், சூப்பர் அப்துல் ரகுமான், அப்துல் ஜலீல், மண்டல ஒருங்கிணைப்பாளர் மேஜர் கணபதி, முன்னாள் தலைவர்கள் ஆறுமுகசாமி, உறுப்பினர்கள் முகமது ஆரிப், செய்யது யாசீன், அப்துல் காதர், மாணிக்க முத்துசாமி, முசம்மில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குமரப்பா பள்ளி பேராவூரணி டாக்டர் ஜே.ஸி. குமரப்பா செண்டினரி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் முனைவர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர் நாகூர்பிச்சை, குமரப்பா அறக்கட்டளை பொருளாளர் அஸ்வின் கணபதி முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், மாணவிகள் பொங்கல் வைத்து, சூரிய கடவுளை வணங்கி, ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் பொங்கல் வழங்கங்கப்பட்டது. மேலும் மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் நினைவு பரிசுகளை வழங்கினர். விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பள்ளி முதல்வர் சர்மிளா, அறங்காவலர்கள் ராமு, கணபதி, ஆனந்தன், நபிஷாபேகம், ஆசிரியர்கள் சுரேஷ், மூர்த்தி, பெரியநாயகி, ரமாதேவி, ஆஞ்சுகாதேவி, பிரதீஷா, பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story