பொங்கல் பண்டிகை: அதிகரித்தது வெல்லம் வரத்து

பொங்கல் பண்டிகை: அதிகரித்தது வெல்லம் வரத்து

 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெல்லம் வரத்து அதிகரித்துள்ள நிலையில், சிப்பம் ரூ.1,500-க்கு விற்பனையாகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெல்லம் வரத்து அதிகரித்துள்ள நிலையில், சிப்பம் ரூ.1,500-க்கு விற்பனையாகிறது.

தமிழர்கள் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள கரும்பாலைகளில் வெல்லம் உற்பத்தி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் வெல்லம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. சேலம் செவ்வாய்பேட்டை மூலப்பிள்ளையார் கோவில் அருகே வெல்ல மண்டி உள்ளது. இந்த மண்டிக்கு ஓமலூர், காடையாம்பட்டி, கருப்பூர், தின்னப்பட்டி, தீவட்டிப்பட்டி உள்ளிட்ட பல்ேவறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வெல்லத்தை கொண்டு வந்து ஏலம் விடுகின்றனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு வெல்ல மண்டிக்கு 110 டன் வெல்லம் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.

30 கிலோ எடை கொண்ட ஒரு சிப்பம் ரூ.1,350 முதல் ரூ.1,360 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகை நெருங்குவதால் தற்போது வெல்ல மண்டிக்கு வெல்லம் வரத்து அதிகரித்துள்ளது. அதாவது நேற்று வெல்ல மண்டிக்கு 160 டன் வரை வெல்லம் கொண்டு வரப்பட்டது. ஒரு சிப்பம் ரூ.1,480 முதல் ரூ.1,500 வரை விற்பனை செய்யப்பட்டது. கடந்த 10 நாட்களில் வெல்லம் சிப்பத்துக்கு ரூ.150 வரை உயர்ந்துள்ளது. மண்டிக்கு சேலம் சுற்றுவட்டார வியாபாரிகளும் மற்றும் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும் வந்து வெல்லத்தை வாங்கி செல்கின்றனர். இதுதவிர வெளிமாநில வியாபாரிகளும் இங்கு வந்து வெல்லம் வாங்கி செல்கின்றனர்.

Tags

Next Story