பொங்கல் பண்டிகை; மல்லிகை கிலோ ரூ. 3000

பொங்கல் பண்டிகை;  மல்லிகை கிலோ ரூ. 3000

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உசிலம்பட்டி பூமார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்த நிலையில், மல்லிகை கிலோ ரூ.3000க்கு விற்பனையானது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உசிலம்பட்டி பூமார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்த நிலையில், மல்லிகை கிலோ ரூ.3000க்கு விற்பனையானது.

தை பொங்கலை முன்னிட்டு உசிலம்பட்டி மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது - மல்லிகை 3000 ரூபாய்க்கும் முல்லை 2000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அறுவடை திருநாளான தைத் திருநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் வைத்து தமிழர் திருநாளை நாளை மறுநாள் கொண்டாட உள்ளனர்., இந்த தை பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

அதன்படி மல்லிகை 3 ஆயிரம் ரூபாய்க்கும், முல்லை 2 ஆயிரம் ரூபாய்க்கும், பிச்சி மற்றும் மெட்ராஸ் மல்லி 1500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது., கடந்த வாரம் வரை சுமார் 1500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட மல்லிகை விலை இருமடங்கு உயர்ந்து 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது., இதே போல் கடந்த வாரம் வரை 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பிச்சி, முல்லை, மெட்ராஸ் மல்லி உள்ளிட்ட பூக்களின் விலை இன்று மூன்று மடங்கு உயர்ந்து 1500 முதல் 2000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து குறைந்துள்ள சூழலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் பூக்களின் விலை இன்று கடுமையாக உயர்ந்துள்ளது, மேலும் நாளை மறுநாள் பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ள சூழலில் நாளை பூக்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.,

Tags

Next Story