கிள்ளியூர் திமுக சார்பில் பொங்கல் விழா

கிள்ளியூர் திமுக சார்பில் பொங்கல் விழா
கிள்ளியூர் திமுக சார்பில் பொங்கல் விழா
கிள்ளியூர் திமுக சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது.

குமரி மாவட்டம் கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழர் திருவிழாவான சமத்துவபொங்கல் விழா கிள்ளியூர் திமுக அலுவலகம் உட்பட 3 இடங்களில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கிள்ளியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் பேரூர் திமுக செயலாளர்கள் சத்யராஜ், மனோஜ், எஸ் எம் கான், நிர்வாகிகள் வழக்கறிஞர் ஜெபா ஜாண் , தங்கதுரை, மத்திக்கோடு ஊராட்சி துணைத் தலைவர் ஜெனோ, அவைத் தலைவர் பாலூர் தேவா, கிறிஸ்டல் பவி, ஷோபா மற்றும் கட்சியின் கிளை செயலாளர்கள், அணிகளுடைய அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் கிள்ளியூர். தெற்கு ஒன்றிய பகுதியான வேங்கோடு மற்றும் மத்திகோடு ஊராட்சி உட்பட பல பகுதிகளின் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது.

Tags

Next Story