பொங்கல் பண்டிகை: திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து சிறப்பு பஸ்கள்
சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பொங்கல் பண்டிகை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது என அரசு போக்குவரத்துக் கழகம் மண்டல மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து திண்டுக்கல், தேனி, பழநி ஆகிய பகுதிகளுக்கு பயணிகள் செல்வதற்கு 150 சிறப்பு பஸ்களும், மீண்டும் சொந்த ஊரிலிருந்து சென்னை செல்வதற்கு 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.மேலும் திருப்பூர் 50, கோவை 75, திருச்சி 30 மற்றும் இதர ஊர்களுக்கு 50 பஸ்களும், திண்டுக்கல், பழனி, திருச்சி,
மதுரை ஆகிய இடங்களிலிருந்தும் அவற்றினைச் சார்ந்த பகுதிகளிலிருந்தும் சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை முன்னிட்டு, அரசு போக்குவரத்துக் கழகத்தின் மூலம் குமுளிக்கு 100 சிறப்புப் பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.