பொங்கல் பண்டிகை: சேலம் வழியாக கோவை-தாம்பரம் இடையே சிறப்பு ரயில்

பொங்கல் பண்டிகை: சேலம் வழியாக கோவை-தாம்பரம் இடையே சிறப்பு ரயில்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியாக கோவை - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியாக கோவை - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

சேலம் ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியாக கோவை-தாம்பரம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன் படி கோவை - தாம்பரம் சிறப்பு ரெயில் (06086) வருகிற 16, 17 ஆகிய தேதிகளில் கோவையில் இருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு வழியாக இரவு 11.05 மணிக்கு சேலம் வந்தடையும் இங்கிருந்து 11.08 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், சென்னை எழும்பூர் வழியாக மறுநாள் காலை 5.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

இதேபோல் மறு மார்க்கத்தில் தாம்பரம் - கோவை சிறப்பு ரெயில் (06085) வருகிற 17,18 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக மதியம் 1.03 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 1.05 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் வழியாக மாலை 4.30 மணிக்கு கோவை சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story