பொங்கல் பண்டிகை விளையாட்டு போட்டி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளிபாளையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, பள்ளிபாளையம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் காவேரி ஆர்.எஸ். கிளை சார்பில் 26 ஆம் ஆண்டு தைப்பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் கிளை தலைவர் பூபாலன் தலைமையில், மாவீரன் பகத்சிங் நினைவு திடலில் நடைபெற்றது .

இதில் வாலிபர் சங்க கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கோலப்போட்டி, இசை நாற்காலி ,தண்ணீர் குடம் எடுத்தல், சாக்குப்போட்டி, கயிறு ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது . இதில் வெற்றி பெற்ற சிறுவர் சிறுமியருக்கு பரிசுகள் வழங்கி ஊக்கம் அளிக்கப்பட்டது.

Tags

Next Story