பொங்கல் விழா : கிராமங்களில் விளையாட்டு போட்டி

ராமநாதபுரம் அருகே வழுதூர் கிராமத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு செங்கல் இழுக்கும் போட்டி, பாட்டிலில் தண்ணீர் நிரப்பும் போட்டி, யானைக்கு கண் வைக்கும் போட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது

ராமநாதபுரம் மாவட்டம் வழுதூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அருளொளி விநாயகர் ஆலயத்தில் மார்கழி முதல் நாளில் இருந்து 30 நாட்களும் விநாயகப் பெருமானுக்கு பல்வேறு விதமான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது .தை முதல் நாளை முன்னிட்டு பால் பன்னீர் இளநீர் திரவிய பொடிகள் மஞ்சப்பொடி உள்ளிட்ட 11 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

அதன் பின்பு சிறுவர் சிறுமிகளுக்கான 50 மீட்டர் மற்றும் 100 மீட்டர் ஓட்ட போட்டிகள் நடைபெற்றது இளைஞர்களுக்கான ஒரு கிலோமீட்டர் ஓட்ட போட்டிகளும் செங்கலில் இழுத்து நடந்து வரும் ஆண்களுக்கான போட்டி நடைபெற்றது அதன் பின்பு யானைக்கு கண் வைக்கும் போட்டி மற்றும் ஆண்கள் பெண்களுக்கு மியூசிக் சேர் போட்டி நடைபெற்றது தண்ணீர் சிக்கனத்தை சேமிக்கும் விதமாக பெண்களுக்கான பாட்டிலில் தண்ணீர் நிரப்பும் போட்டி ஆகியவையை சிறப்பாக நடைபெற்றது போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வழுதூர் அருளொளி மன்றம் சார்பில் பரிசுகள் வழங்கி பாராட்டினர் விழாவின் நிறைவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது இதில் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் விழாவிற்கான ஏற்பாடுகளை வழுதூர் அருளொளி மன்றத்தினர் செய்திருந்தனர்.

Tags

Next Story