2.83 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுதொகுப்பு

2.83 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுதொகுப்பு

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல் 

மயிலாடுதுறையில் பொங்கல் பரிசுதொகுப்பு திட்டத்தை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்புகளை வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் ஆறுபாதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்ட தொடக்கவிழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு 2 லட்சத்து 83 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

முன்னதாக பேசிய அமைச்சர் கூறுகையில் சென்னை மிக்ஜாம் புயல் பாதிப்பு, தென் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்பு, மீட்பு நடவடிக்கைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாகக் கையாண்டு மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 லட்சத்து 83 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உமாமகேஸ்வரி சங்கர், செம்பனார்கோயில் ஒன்றியக்குழுத்தலைவர் நந்தினி ஸ்ரீதர், மற்றும் வெளாண்துறை கூட்டுறவுதுறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story