காஞ்சியில் 3.20 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

காஞ்சியில் 3.20 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காஞ்சியில் 3.20 லட்சம் பேருக்கு பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காஞ்சியில் 3.20 லட்சம் பேருக்கு பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி அட்டைதாரர்களுக்கு, 1,000 ரூபாய் ரொக்கமும், பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு, தமிழக அரசு வழங்க உள்ளது.

இதற்கான, டோக்கன் வினியோகிக்கும் பணியில், ரேஷன் கடை பணியாளர்கள் நேற்று முதல் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத், காஞ்சிபுரம், உத்திரமேரூர் என, ஐந்து தாலுகாக்களிலும், 3.64 லட்சம் அரிசி அட்டைதாரர்கள் உள்ளனர். இதில், தமிழக அரசு மற்றும் மத்திய அரசு நிறுவனங்களில் பணியாற்றுவோர், வரி செலுத்துவோருக்கு பொங்கல் பரிசு வழங்கப்படாது என்பதால், பிற அட்டைதாரர்களுக்கு மட்டும் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 3.20 லட்சம் அரிசி அட்டைதாரர்களுக்கு, வரும் 10ம் தேதி முதல், பொங்கல் பரிசு, ரேஷன் கடைகள் வாயிலாக வழங்கப்பட உள்ளது.

Tags

Next Story