திருவாரூரில் 3.89 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு

திருவாரூரில் 3.89 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு

 மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ 

திருவாரூர் மாவட்டத்தில் 3,89,732 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் முழுநேர நியாய விலை கடைகள் 592 பகுதிநேர நியாய விலை கடைகள் 182 என மொத்தம் 774 நியாய விலை கடைகள் மூலம் மூன்று லட்சத்து 89 ஆயிரத்து 732 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு மற்றும் ரொக்கம் ரூபாய் ஆயிரம் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தகவல் தெரிவித்துள்ளார். .

Tags

Next Story