7 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.78 கோடி மதிப்பில் பொங்கல் பரிசு 

7 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.78 கோடி மதிப்பில் பொங்கல் பரிசு 

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல் 

தஞ்சாவூர் மாவட்டத்தில், தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை, மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் பழநிமாணிக்கம் வழங்கினார்.

தஞ்சாவூர் மாவட்டம், யாகப்பா நகர் அருளானந்த நகர் 12 வது நகர் நவநீதபுரம் 1, 2 காவேரி மொத்த விற்பனை பண்டக சாலையில், தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் வருகிற 2024-ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு, பயனாளி ஒருவருக்கு ரொக்கப்பணம் ரூ. 1000/-, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு நீள கரும்பு என பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்கள் வழங்கிட தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

இத்துடன் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச வேட்டி, சேலை வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது. இதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 1183 நியாய விலைக் கடைகளுக்கு உட்பட்ட 7,03,160 அரிசி குடும்ப அட்டைதாரர்ளுக்கு ரூ.78/- கோடி மதிப்பிலான 2024 -ஆம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர்), தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். இராமநாதன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ஆர்.உஷா புண்ணியமூர்த்தி, தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி, மண்டல இணைப் பதிவாளர் சி.தமிழ்நங்கை, தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி செயலாட்சியர் ஜெ.பழனீஸ்வரி, துணைப் பதிவாளர் இரா.பழநியப்பன், வேளாண்மை இணை இயக்குநர் ந.க.நல்லமுத்து ராஜா, தஞ்சாவூர் காவேரி மொத்த விற்பனை பண்டகச் சாலை தலைவர் வே.பண்டரிநாதன், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story