ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் 25-ம் தேதி

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் 25-ம் தேதி
ஆற்றுக்கால் பகவதி கோவில் நிர்வாகிகள் இன்று நாகர்கோவிலில் பேட்டியளித்தனர்.
கொரோனாவால் எளிமையாக நடைபெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா இந்தாண்டு விமர்சையாக நடைபெறும் என ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் நிர்வாக தலைவர் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா உலகப் புகழ் வாய்ந்ததாகும். ஆற்றுக்கால் பகவதியம்மன் திருவிழா (17ந் தேதி) காலை 8 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டி துவங்குகிறது. லட்சகணக்கான பெண் பக்தர்கள் பங்கேற்கும் பொங்கல் விழா 25ந் தேதி சுத்த புண்ணிய சடங்குகளுக்கு பின்பு காலை 10.30 மணிக்கு பண்டார அடுப்பில் தீ மூட்டி துவங்கப்படுகிறது. மதியம் 2.30 மணிக்கு பொங்கல் நைவேத்தியம், இரவு அம்மன் நகர் ஊர்வலம் நடைபெறுகிறது. 26ந் தேதி காலை 12.30 மணிக்கு குருதி தர்பணத்துடன் திருவிழா நிறைவடைகிறது.

இதுகுறித்து குமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களிடம் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் நிர்வாக தலைவர் ஷோபா கூறுகையில், இதற்கு முன்பு ஆற்றுக்கால் பொங்கல் விழாவில் 25 லட்சம் பெண் பக்தர்கள் கலந்துகொண்டு பொங்கலிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனாவால் எளிமையாக நடைபெற்ற பொங்கல் விழா இந்த ஆண்டு மிக விமர்சியாக நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு அதை முறியடிக்கும் வகையில் அதிகமான பெண் பக்தர்கள் பொங்கல் இடுவார்கள் என எதிர்பார்க்கிறோம். பொங்கல் விழா முன்னிட்டு பாதுகாப்பிற்கு 5000க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபடுகின்றனர் எனவும் தெரிவித்தார்.

Tags

Next Story