பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்கள் இயக்கம்
சிறப்பு ரயில்
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொங்கல் பண்டிகையைக் கருத்தில் கொண்டு, தாம்பரம் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயிலானது (06003) வரும் 11, 13, 16 ஆம் தேதிகளில் தாம்பரத்திலிருந்து இரவு 9.50 மணிக்குப் புறப்பட்டு, திருநெல்வேலிக்கு மறுநாள் முற்பகல் 11.15 மணிக்கு சென்றடையும். மறுமாா்க்கமாக, திருநெல்வேலி - தாம்பரம் இடையிலான சிறப்பு ரயிலானது (06004) வரும் 12, 14, 17 ஆம் தேதிகளில் திருநெல்வேலியிலிருந்து பிற்பகல் 2.15 மணிக்குப் புறப்பட்டு தாம்பரத்துக்கு மறுநாள் அதிகாலை 3.15 க்கு சென்றடையும்.
இந்த ரயிலானது தாம்பரத்திலிருந்து புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூா், தென்காசி, பாவூா்சத்திரம், கீழக்கடயம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மாதேவி வழியாக திருநெல்வேலியை சென்றடையும். இதேபோல தாம்பரம் - தூத்துக்குடி முன்பதிவற்ற சிறப்பு ரயிலானது (06001) வரும் 14, 16 ஆம் தேதிகளில் தாம்பரத்தில் காலை 7.30 மணிக்குப் புறப்பட்டு தூத்துக்குடிக்கு இரவு 10.45 க்கு சென்றடையும். மறுமாா்க்கமாக தூத்துக்குடி - தாம்பரம் முன்பதிவற்ற சிறப்பு ரயிலானது (06002) வரும் 15, 17 ஆம் தேதிகளில் தூத்துக்குடியிலிருந்து காலை 6 மணிக்குப் புறப்பட்டு தாம்பரத்துக்கு இரவு 8.30 மணிக்குச் சென்றடையும். இந்த ரயிலானது தாம்பரத்திலிருந்து புறப்பட்டு செங்கல்பட்டு, மேல்மருத்துவத்தூா், திண்டிவனம், விழுப்புரம், கடலூா், சிதம்பரம், சீா்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூா், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, துடிமேலூா் வழியாக தூத்துக்குடியைச் சென்றடையும்.