பொன்னமராவதி : வெறி நாய் கடித்ததில் 10 பேர் காயம்

X
பைல் படம்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கருப்புகுடிப்பட்டி கிராமத்தில் நள்ளிரவு பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகள் சத்தம்கேட்டு ஆட்டின் உரிமையாளர் மற்றும் உறவினர்கள் வந்து பார்த்தபோது, ஆட்டின் கழுத்தை கடித்துக் கொண்டிருந்த நாயை விரட்ட முயன்றனர். அப்போது, அவர்களையும் நாய் கடித்துள்ளது. இதேபோல் வடக்குத்தெரு, தெற்குத தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புவாசிகள், கால்நடைகளையும் கடித்து அச்சுறுத்தியுள்ளது. நாய் கடிபட்ட ஆடுகள் இரண்டும் இறந்து விட்டன. மேலும், நாய்கடி பாதிப்புக்கு ஆளான 10க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பொன்னமராவதி தனியார் மருத்துவமனை ஆகிய இடங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிலர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
Next Story