பொன்னியம்மன் ஆலயத்தில் தேர் திருவிழா

பொன்னியம்மன் ஆலயத்தில் தேர் திருவிழா

பொன்னி அம்மன்

அச்சரப்பாக்கம் அருகே அரப்பேடு கிராமத்தில் உள்ள அருள்மிகு பொன்னியம்மன் ஆலயத்தில் தேர் திருவிழா நடைபெற்றது

செங்கல்பட்டு மாவட்டம்,அச்சரப்பாக்கம் அருகே உள்ள அரப்பேடு கிராமத்தில் பழமையான கிராம தேவதையான ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை திருத்தே திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இன்று காலை பொன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து,பாரம்பரிய முறைப்படி புடவைகளால் மேற்கூரை அமைக்கப்பட்ட நான்கு மிகப்பெரிய தண்டுகளால் கிராம மக்கள் ஒன்றிணைந்து தோலில் சுமந்தவாறு பேண்ட் வாத்தியங்கள், மேள தாளங்கள் மற்றும் நாதஸ்வரம் இன்னிசையுடன் தேர் புறப்பட்டு கிராமத்தின் நான்கு முக்கிய வீதிகளிலும் வளம் வந்தது.

அப்பொழுது,நேர்த்திக்கடன் வேண்டிக் கொண்ட மக்கள் அலகு குத்துதல், மற்றும் ஆடு,கோழிகளை பலி கொடுத்தனர்.

Tags

Next Story