காளியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா

காளியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா

காளியம்மன் 

குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் நேற்று பூச்சாட்டு விழா நடந்தது. இதையொட்டி வரும் 28ம் தேதி மகா குண்டமும், 29ம் தேதி தேர் திருவிழாவும் நடக்கிறது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா நேற்று கோலாகலமாக நடந்தது. பிப். 20ல் மறு பூச்சாட்டு, பிப். 21ல் கொடியேற்றம், பிப். 27ல் அம்மனுக்கு தீர்த்தக்குட புனித நீர் ஊற்றுதல், தேர் கலசம் வைத்தல், காவேரி ஆற்றுக்கு சென்று சக்தி அழைத்து வருதல், பிப். 28ல் மகா குண்டம், பூ மிதித்தல், பொங்கல் விழா, அலங்கார ஆராதனை, பிப். 29ல் அம்மன் திருக்கல்யாணம், தேர்த்திருவிழா, வண்டிவேடிக்கை, மார்ச். 1ல் தேர் நிலை அடைதல், நாதஸ்வர இன்னிசையுடன் அம்மன் திருவீதி உலா, மார்ச். 2ல் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா, மார்ச். 3ல் அம்மனுக்கு ஊஞ்சல் விழா ஆகியன நடைபெறவுள்ளன. தக்கார் வடிவுக்கரசி, செயல் அலுவலர் குணசேகரன் மற்றும் விழாக்குழுவினர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story