சிவகாசியில் மண்டல பூஜை நிறைவு விழா

சிவகாசியில் மண்டல பூஜை நிறைவு விழா

 ஸ்ரீபேச்சியம்மன் கோவில் 

சிவகாசி மாசி பொங்கல் விழாவை முன்னிட்டு மண்டல பூஜைகள் அதிவிமர்ச்சியாக நடைப்பெற்றன. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பு.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீபேச்சியம்மன் கோவில் மாசி பிரமோற்சவ திருவிழாவின் முக்கிய நிறைவு விழாவாக மண்டல பூஜைகள் அதிவிமர்ச்சியாக நடைப்பெற்றன. சிவகாசியிலுள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீபேச்சியம்மன் கோவில் மாசி பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய ஒவ்வொரு நாளும் ஸ்ரீபேச்சியம்மன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று ஒவ்வொரு நாளும் வெவ்வேரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.மேலும் அதனை தொடர்ந்து, கோவில் வளாகத்தில மண்டல பூஜை சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு வேதச்சாரிகள் மந்திரம் முழங்க யாகசாலை பூஜைகள் நடைப்பெற்றதை தொடர்ந்து அம்மனுக்கு பால்,தயிர்,இளநீர், பன்னீர், மஞ்சள் மற்றும் வாசன திரவியங்களுடன் அபிஷேகம் நடைப்பெற்றன. பின்னர் ஸ்ரீபேச்சியம்மனுக்கு சந்தன காப்புடன் வண்ண, வண்ண மலர்களுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.திருவிழா ஏற்பாடுகளை,ஸ்ரீபேச்சியம்மன் கோவில் நிர்வாகிகளும், திருவிழா உபயதாரர்களும் சிறப்பாக செய்துள்ளனர்.

Tags

Next Story