சேலம் ராஜகணபதி கோவிலில் தாரா பாத்திரம் வைத்து பூஜை

சேலம் ராஜகணபதி கோவிலில் தாரா பாத்திரம் வைத்து பூஜை

அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் சேலம் ராஜகணபதி கோவிலில் தாரா பாத்திரம் வைத்து பூஜை நடந்தது.


அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் சேலம் ராஜகணபதி கோவிலில் தாரா பாத்திரம் வைத்து பூஜை நடந்தது.

கோடை காலத்தின் உச்சமாக கருதப்படும் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் நேற்று தொடங்கியது. ஜோதிட சாஸ்திரப்படி சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் சித்திரை மாதம் 21-ந் தேதி தொடங்கி வைகாசி மாதம் 15-ந் தேதி வரை அக்னி நட்சத்திரம் காலமாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும். நேற்று தொடங்கிய கத்திரி வெயிலின் தாக்கம் வருகிற 28-ந் தேதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, அபிஷேக பிரியரான சிவபெருமானை குளிர்விக்கும் வகையில் அனைத்து சிவாலயங்களிலும் மூலவர் மீது தாரா பாத்திரம் தொங்க விடப்பட்டு அதில், இருந்து குளிர்ந்த நீர் விழும் வகையில் ஏற்பாடு செய்யப்படும். அதன்படி, சேலம் கடைவீதி ராஜகணபதி கோவிலில் நேற்று மூலவருக்கு தாராபிஷேகம் செய்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதாவது, ராஜகணபதி சிலையின் மீது தாரா பாத்திரம் தொங்கவிடப்பட்டு அதில் இருந்து நீர் சிலை மீது விழும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 வாரங்களுக்கு தாராபிஷேகம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story