திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா

திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா
 சங்கரன்கோவில் திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது.
சங்கரன்கோவில் திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர் நகர் 2வது தெருவில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து நாள்தோறும் திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாராதனை நடைபெற்று வந்தன. இந்நிலையில் நேற்று இரவு பூக்குழி திருவிழாவில் 200க்கும் மேற்பட்டோர் பக்தர்கள் கலந்து கொண்டு விரதம் இருந்து காப்பு கட்டி பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story