ஆர்.புதுப்பாளையம் மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆர்.புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கடந்த 26-ந் தேதி கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தினமும் அம்மனுக்கு அபிஷேகம் செய்து பின்பு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 6-ம் தேதி இரவு பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. 8-ம் தேதி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான சக்தி அழைத்தல், மற்றும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி காலை நடைபெற்றது. பின்பு ஊர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாலை ஊரின் முக்கிய வீதிகள் வழியாக திருத்தேர் பவனி நடைபெற்றது. இன்று மஞ்சள் நீராடல் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.
Next Story