முத்து மாரியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா
தென்காசி மாவட்டம், அருணாபேரியில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே அருணா பேரியில் உள்ள அருள் தரும் அழகு முத்து மாரியம்மன் கோயிலில் 61ம் ஆண்டு திருவிழா 10 நாள்களாக நடைபெற்றது. இக்கோயிலில் மண்டல பூஜை, கும்பாபிஷேக விழா ஆகியவை நடைபெற்ற நிலையில், நேற்று இரவு பூக்குழி திருவிழாவும் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கினர். மேலும் விழா நாள்களில் நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story