மேச்சல் நிலமாக மாறிய பூலாம்பட்டி நீர் பிடிப்பு பகுதி
சேலம் மாவட்டம் பூலாம்பட்டி காவிரி ஆற்றின் தண்ணீர் அளவு குறைந்ததால் நீர்த்தேக்க கதவணை பகுதிகளில் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாக மாறி உள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் செக்கானூர் பூலாம்பட்டி நெருஞ்சிப்பேட்டை நெடுங்குளம் கோனேரிப்பட்டி ஊராட்சி கோட்டை ஆகிய நீர்மின் கதவனை வழியாக செல்கிறது. தற்போது மேட்டூர் அணையின் நீர் இருப்பு குறைந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் மட்டும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பூலாம்பட்டி நெருஞ்சிப்பேட்டை நீர்தேக்க பகுதியில் தண்ணீரின் அளவு குறைந்து ஆங்காங்கே குட்டை போல் தண்ணீர் தேங்கி பாறைகளாக காட்சியளிக்கிறது.இதனால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது பூலாம்பட்டி நெருஞ்சிப்பேட்டை நீர் பிடிப்பு பகுதிகளில் செடி கொடிகள் முளைத்து கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாக காட்சியளிக்கிறது.