பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லாத பூலாம்பட்டி படகு துறை

பூலாம்பட்டி படகு துறை பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குட்டி கேரளா என அழைக்கப்படும் சேலம் மாவட்டம் பூலாம்பட்டி காவிரி ஆறானது இயற்கை எழில்மிகு மலைப்பகுதிகளைக் சார்ந்து உள்ளது . பூலாம்பட்டி பேரூராட்சி காவிரி ஆற்றில் விசைபடகு போக்குவரத்து செயல்பட்டு வருகிறது. சேலம் மாவட்ட எல்லையான பூலாம்பட்டியிலிருந்து, ஈரோடு நெரிஞ்சி பேட்டைக்கு தினசரி 1000-க்கும் மேற்பட்டோர் விசைப் படகு மூலம் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் காவிரியில் கடந்தாண்டு ஏற்பட்ட வெள்ளபெருக்கால் பூலாம்பட்டி படகுத்துறை கரைப்பகுதி முழுவதும் இடிநது விழுந்தது. இந்த நிலையில் தற்போது வரை கரைப்பகுதிகளை சரி செய்யாமல் பூலாம்பட்டி பேரூராட்சி அலட்சியம் காட்டி வருகிறது. தற்போது நெருஞ்சிப்பேட்டை கதவனை பராமரிப்பு பணிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதனால் பூலாம்பட்டி காவிரி ஆற்றில் குறைவான தண்ணீர் உள்ளதால் பூலாம்பட்டியில் இருந்து நெருஞ்சிப்பேட்டைக்கு விசைப்படகு மூலம் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் பொதுமக்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். வெள்ள அரிப்பால் பாதிக்கப்பட்டு வரும்.

இந்த பூலாம்பட்டி படகு துறை கரையோரத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம், தற்போது கரையோர பகுதியில் இருந்து படகில் ஏறுவதற்கு பாதுகாப்பில்லாத நடைமேடையில் மக்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே பூலாம்பட்டி பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு எந்த ஒரு அசம்பாவிதம் ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story