பூமாலை வணிக வளாக கடைகள் ஒதுக்கீடு - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

பூமாலை வணிக வளாகங்களில் மகளிர் சுயஉதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களுக்கான கடைகள் ஒதுக்கீடு செய்யவதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க தர்மபுரி மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் சார்பில் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்தின் கீழ் தர்மபுரி நகராட்சி பஸ் நிலையம் அருகே செயல்படும் பூ மாலை வணிக வளாகம் மற்றும் வட்டார அளவில் அமைந்துள்ள பூமாலை வணிக வளாகங்களில் உள்ள கடைகளில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வ தற்கு கடைகள் ஒதுக்கீடு செய்து வாடகைக்கு விடப்பட உள்ளது.

எனவே விருப்பம் உள்ள சுய உதவி குழுக்களிடமி ருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தங்கள் விண் ணப்பங்களை திட்ட இயக்குனர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்), இரண்டாம் தளம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கட்டடம், கலெக்டர் அலுவலகம் தர்மபுரி, 636705 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமோ நாளை (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்ப டுகிறது.தாமதமாக விண்ணப்பங்கள் வந்தால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story