பூந்தமல்லி : கழிவுநீர் கலப்பால் துர்நாற்றம்

பூந்தமல்லி : கழிவுநீர் கலப்பால் துர்நாற்றம்
X

தேங்கி நிற்கும் கழிவுநீர்

பூந்தமல்லி அண்ணா ஆர்ச் அருகே மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் கலப்பதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அண்ணா ஆர்ச் அருகில் உள்ள சாலையில் மழைநீர் கால்வாய்கள் உள்ளது. இதில் கழிவுநீர் கலப்பதால் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழுவுநீர் மழைநீர் கால்வாயில் கலப்பதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags

Next Story