பூவாடை தொட்டிச்சி காளியம்மன் கோவில் முளைப்பாரி ஊர்வலம்

பூவாடை தொட்டிச்சி காளியம்மன் கோவில் முளைப்பாரி ஊர்வலம்

முளைப்பாரி ஊர்வலம் 

மேலூர் பூவாடை தொட்டிச்சி காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி சுமந்து நகரில் ஊர்வலமாக வந்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் 6வது வார்டு அண்ணா காலனி பகுதியில் உள்ள பூவாடை தொட்டிச்சி காளியம்மன், ஸ்ரீ சங்கிலி கருப்பு சுவாமி, ஸ்ரீ பங்களா முனியாண்டி, ஸ்ரீ அக்கினி மதுரை வீரன் சுவாமியின் 40 ஆம் ஆண்டு திருவிழா நடைபெற்று வருகின்றது. கடந்த 15 தினங்களாக பக்தர்கள் காப்பு கட்டி கடுமையான விரதம் இருந்து வந்தனர். காப்பு கட்டிய பக்தர்கள் நேற்று முன்தினம் காலை கோவிலில் இருந்து புறப்பட்டு மண்கட்டி தெப்பகுளத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்து, அலகு குத்தி கோவிலுக்கு ஊர்வலமாக நேற்று வந்து வேண்டுதலை நிறைவேற்றினர்

. அதைத் தொடர்ந்து நேற்று நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி சுமந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக, மேளதாளம் முழங்க ஊர்வலமானது மங்கள வாத்தியங்களுடன் சென்றனர். தொடர்ந்து கோவில் முன்பு கிடா வெட்டி சாமியாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story