பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கஞ்சி காய்ச்சும் போராட்டம்

பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கஞ்சி காய்ச்சும் போராட்டம்

கஞ்சி காய்ச்சும் போராட்டம் 

நூறுநாள் வேலைக்கான 3 மாத கால சம்பள பாக்கியை வழங்க மறுக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்தும், அப்பாவி ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்காமல், தீபாவளி பண்டிகையை கருப்பு நாளாக ஆக்காமல், சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் தெற்கு ஒன்றியம் சார்பில், கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடைபெற்றது. சி.பி.எம் ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் தலைமை வகித்தார். மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், என்.சரவணன், எஸ்.தமிழ்ச்செல்வி மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், நூறுநாள் வேலைத் திட்டப் பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக, பூதலூர் நான்கு ரோட்டில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்தில், கோரிக்கைகளை விளக்கி மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர். பின்னர் ஊர்வலமாகச் சென்று வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு, கஞ்சி காய்ச்சி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் போராட்டம் நடத்தியவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் கூலியை வழங்க உறுதியளித்தனர். இதையடுத்து, சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

Tags

Next Story