காஞ்சியில் 814 போலீசாருக்கு தபால் ஓட்டு

காஞ்சியில் 814 போலீசாருக்கு தபால் ஓட்டு

தபால் ஓட்டு

தேர்தல் பணியாற்றும் போலீசார் மற்றும் ஓய்வு பெற்ற போலீசார் என, 814 பேர் தபால் ஓட்டளிக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கான தபால் ஓட்டு செலுத்தும் பணி, நாளை மூன்றாம் கட்ட பயிற்சியின்போது நடைபெற உள்ளது. அதேபோல, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் பணியாற்ற உள்ள போலீசாருக்கு தபால் ஓட்டு செலுத்தும் பணி நேற்று துவங்கியது. காஞ்சிபுரத்தில் நேற்றும், ஸ்ரீபெரும்புதுாரில் இன்றும் போலீசார் தபால் ஓட்டு செலுத்துகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், தேர்தல் பணியாற்றும் போலீசார் மற்றும் ஓய்வு பெற்ற போலீசார் என, 814 பேர் தபால் ஓட்டளிக்கின்றனர். காஞ்சிபுரம் கலெக்டர் வளாகத்தில் உள்ள கூட்டரங்கில், தபால் ஓட்டு செலுத்துவதற்கான பெட்டி வைக்கப்பட்டிருந்தது. ஓட்டுச்சாவடிக்கான நிலை அலுவலர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். வாக்காளர் பட்டியலில் போலீசின் பெயர் சரிபார்க்கப்பட்டு, விரலில் மை வைக்கப்பட்ட பின், அவர்களுக்கு தபால் ஓட்டு செலுத்துவதற்கான ஓட்டுச்சீட்டு வழங்கப்பட்டது. இதையடுத்து, வேட்பாளரை தேர்வு செய்து, உறையில் மடித்து மூடி, ஒட்டிய பின், பெட்டியில் தபால் ஓட்டு செலுத்தினர்.

Tags

Next Story