85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்களுக்கு தபால் வாக்கு
பாராளுமன்ற பொதுத்தேர்தலில் வாக்களிக்க 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தபால் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற பொதுத்தேர்தலில் வாக்களிக்க 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தபால் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024, அறிவிக்கப்பட்டுள்ளதையொட்டி நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதிக்கான(தனி) 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அஞ்சல் வாக்கு செலுத்திட ஏதுவாக படிவம் 12D தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அளித்துள்ள இந்த கூடுதல் வசதியினை 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ளுமாறும் அப்படிவத்தினை பூர்த்தி செய்து மீள 5 நாட்களுக்குள் வாக்குசாவடி நிலை அலுவலர்களிடம் அளித்திட வேண்டும் எனவும் நாகப்பட்டினம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் .ஜானி டாம் வர்கீஸ், தெரிவித்துள்ளார்கள்.
Next Story