வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அனுப்பப்பட்ட தபால் வாக்குகள்

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தபால் வாக்குகள் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
தருமபுரி பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024ன் வாக்கு எண்ணும் பணிகள் ஜூன் -04 அன்று செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறுவதை முன்னிட்டு, வாக்கு எண்ணும் மையத்தில் தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இருந்து தபால் வாக்குகள் மாவட்ட வருவாய் அலுவகர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார். முன்னிலையில் வாகனத்துக்கு சீல் வைத்து போலீஸ் பாதுகாப்புடன் செட்டி கடை அரசு பொறியல் கல்லூரி வாக்கு என்னும் மையத்திற்கு சென்றதற்கு அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள். தேர்தல் பிரிவு அலுவலர்கள், அனைத்து வட்டாட்சியர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள், மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story