அஞ்சல் துறை மக்கள் குறைத்தீர் கூட்டம் - கோட்ட கண்காணிப்பாளர் தகவல்

கோவை மேற்கு மண்டல அளவிலான அஞ்சல் துறை மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்களின் புகார் மனுக்களை வரும் 20ம்தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி அஞ்சல் கோட்ட கண் காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மேற்குமேண்டல அளவிலான அஞ்சல் துறை சார்பில், மக்கள் குறைதீர் கூட்டம் இந்த மாதம் கோவை ஆர்எஸ்புரம் தலைமை அஞ்சலக வளாகத்தில் நடக்கிறது. நுகர்வோர் தங்கள் அஞ்சல்துறை சார்ந்த குறைகள் ஏதேனும் இருந்தால், தபால் மூலம் தெரிவித்து, நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

நுகர்வோர் தங்கள் மனுவில் விவரமாகவும், தெளிவாகவும் குறிப்பிட வேண் டும். கூட்டத்தின் தேதி பின்னர் தெரிவிக்கப்படும். கடிதத்தின் மேல் மக்கள் குறைதீர் கூட்டம் என்று குறிப்பிட வேண்டும். உதவி இயக்குனர் (தபால் மற்றும் சேமிப்பு), அஞ்சல்துறை தலைவர் அலுவலகம், மேற்கு மண்டலம், கோயம்புத்தூர்- 641002 என்ற முகவரிக்கு கடிதம் வரவேண்டும். புகார் மனு தபால் கிடைக்க வரும் 20ம் தேதி கடைசி நாளாகும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story