சிவகங்கை மாவட்ட அஞ்சலகங்களில் அஞ்சலக காப்பீடு
அஞ்சலக காப்பீடு
சிவகங்கை மாவட்ட அஞ்சலகங்களில் ரூபாய் 10 லட்சம் மதிப்பில் அஞ்சலக காப்பீடு
சிவகங்கை அஞ்சல் கோட்ட கண்காணிப்பு அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் கீழ் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து விபத்து காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்டிற்கு ரூ.399 மற்றும் ரூ.396ல் ரூ.10லட்சம் மதிப்புள்ள இந்த விபத்து காப்பீட்டு திட்டத்தில் 18வயது முதல் 65வயது வரையுள்ளவர்கள் சேரலாம். எவ்விதமான காகித பயன்பாடுமின்றி போஸ்ட்மேன் மூலம் டிஜிட்டல் முறையில் பாலிசியில் சேரலாம். விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்தர ஊனம், பக்கவாதம் உள்ளிட்டவைகளுக்கு ரூ.10லட்சம் இழப்பீடு, விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகள், குழந்தைகளின் கல்வி செலவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இத்திட்டங்களில் உள்ளன. எனவே பொதுமக்கள் அருகிலுள்ள அஞ்சலகங்கள் மற்றும் போஸ்ட் மேன்கள் மூலம் இத்திட்டத்தில் இணையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story