மூத்த குடிமக்கள்,மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் ஒட்டு விண்ணப்பம்

நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்கும் வகையில், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு மூலம் ஓட்டளிக்க கோரும் விண்ணப்பம் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தொடங்கி வைத்தார்.

இந்திய நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19ஆம் தேதி துவங்கி ஏழு கட்டங்களாக இந்தியா முழுவதும் நடைபெற உள்ளது.அவ்வகையில் தமிழகத்தில் அடுத்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து அதற்கான பணிகள் அனைத்தும் தொடங்கி நாளை முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ளது. இந்நிலையில் 100 சதவீத வாக்குப்பதிவு என்ற இலக்கை அடையும் வகையில் அதற்கான விழிப்புணர்வுகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவினை மேற்கொள்ளும் வகையில் , தேர்தல் ஆணையம் அறிவுரையின்படி 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கும் வகையில் அவர்களிடம் 12 டி எனும் விண்ணப்பம் வழங்கும் பணியினை ஆட்சியர் கலைச்செல்வி ஏனாத்தூர் பகுதியில் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து ஆட்சியர் கூறுகையில் , அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தின் கீழ் தேர்தல் ஆணையம் இவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.அவ்வகையில் இவர்களுக்கு சம்மதம் தெரிவிக்கும் வகையில் விருப்பம் தெரிவிக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு அதனைப் பெற்று தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன்பு வீடு தேடி சென்று அவர்களுக்கு தபால் வாக்கு அளித்து அதில் அவர்கள் வாக்குகளை பதிவு செய்த பின் மீண்டும் அலுவலர்கள் அதனைப் பெற்று வருவர்.

இதேபோல் தற்போது 85 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் 12, 035 நபர்களும், 8000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது.இதில் அவர்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே இந்த முறையை பின்பற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அவர்கள் நாங்கள் நேரடியாக வாக்குப்பதிவு மையத்துக்கு செல்வோம் என்றால் அதனை வரவேற்பதாகவும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின் போது, பயிற்சி ஆட்சியர் சங்கீதா, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், கோட்டாட்சியர் கலைவாணி, வட்டாட்சியர் புவனேஸ்வரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story