மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு - ஆட்சியர் தகவல்
பைல் படம்
மாற்றுதிறனாளிகள் வாக்கு சாவடிகளுக்கு செல்லாமல் தபால் ஓட்டு மூலம் தங்களது வாக்கினை செலுத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள 85 வயது பூர்த்தியடைந்த 22,592 எண்ணிகையுள்ள மூத்த குடிமக்களும், 14,006 எண்ணிக்கையுள்ள மாற்றுத்திறனாளிகளும் வாக்குப்பதிவு நாளான 19.04.2024-அன்று தங்களுக்கு உரிய வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டு மூலம் தங்களது வாக்கினை செலுத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக தங்கள் பகுதிக்கான வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் நேரில் வழங்கப்படும் படிவம் 12 D படிவத்தினை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் நேரில் 24.03.2024-க்குள் வழங்கி பயன் பெறலாம் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
Next Story