பெரம்பலூரில் தபால் வாக்குப் பதிவு: ஆட்சியர் ஆய்வு

பெரம்பலூரில் தபால் வாக்குப் பதிவு: ஆட்சியர் ஆய்வு
தபால் வாக்கு பதிவை ஆய்வு செய்த ஆட்சியர்
பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று தபால் வாக்குப் பெரும் நடைமுறையினை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

பெரம்பலூர சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடிக்கு வந்து நேரில் வாக்களிக்க இயலாத 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தபால் வாக்குச்சீட்டு மூலம் வாக்களிக்க ஏதுவாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் படிவம்-12D வழங்கப்பட்டதில்,

1948 மூத்தக்குடி, வாக்காளர்கள் மற்றும் 1524 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தபால் வாக்கு மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். எனவே, இந்த வாக்காளர்களிடம் தபால் வாக்கு பெற பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிகுட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிக்கும் 53 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுக்களில் வாக்குப்பதிவு அலுவலர், வாக்குச்சாவடி நிலை அலுவலர், தேர்தல் நுண் பார்வையாளர் துப்பாக்கி ஏந்திய காவலர் மற்றும் உதவியாளர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர். இக்குழுக்கள் முதல் கட்டமாக ஏப்ரல் ஐந்தாம் தேதி மற்றும் ஏப்ரல் ஆறாம் தேதி வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று தபால் வாக்குகள் பதிவு செய்யும் நடைமுறையினை செயல்படுத்தினர். அதனடிப்படையில்,

ஏப்ரல் ஐந்தாம் தேதி ஆலம்பாடி பகுதியில் வசிக்கும் இரண்டு கண்களும் தெரியாத மாற்றுத்திறனாளி வாக்காளர் வெங்கடாசலம் என்பவரது வீட்டிற்கும், எளம்பலூரைச் சேர்ந்த 95 வயதான வாக்காளரான ராமாயி, என்பவரது வீட்டிற்கும் நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் கற்பகம், தபால் வாக்கு பெறும் நடைமுறை முறையாக செயல்படுத்தப்படுகின்றதா என்பது குறித்து ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள மண்டல அலுவலர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story