சேலத்தில் தபால் ஓட்டுப்பதிவு தொடக்கம்

சேலத்தில் தபால் ஓட்டுப்பதிவு தொடக்கம்

தபால் வாக்குப்பதிவை ஆட்சியர் ஆய்வு

சேலத்தில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் ஓட்டுப்பதிவை கலெக்டர் பிருந்தாதேவி நேரில் ஆய்வு செய்தார்.

சேலம் மாவட்டத்தில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் ஓட்டுப்பதிவு நேற்று முதல் தொடங்கியது. இந்த பணியை கலெக்டர் பிருந்தா தேவி ஆய்வு செய்தார். சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் கடந்த 23-ந் தேதி வரை 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான படிவம் பெறப்பட்டது.

அதன்படி, மாவட்டம் முழுவதும் உள்ள 11 சட்டசபை தொகுதிகளில் தபால் வாக்கு செலுத்த 9,402 பேர் விருப்பம் தெரிவித்திருந்தனர். அவர்களுக்கான தபால் ஓட்டுப்பதிவு நேற்று சட்டசபை தொகுதி வாரியாக தொடங்கியது. குறிப்பாக சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட 3,262 முதியவர்களும், 1,918 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 5,180 வாக்காளர்கள் தபால் வாக்களிக்க தகுதியுள்ளவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. சேலம் சின்னதிருப்பதி கலைவாணி நகரில் முதியவர்கள் தங்களது வீடுகளில் தபால் ஓட்டுப்பதிவு பெறும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும்,

மாவட்ட கலெக்டருமான பிருந்தா தேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Next Story