சங்ககிரியில் தபால் வாக்கு பெறுதல் தொடக்கம்

சங்ககிரி சட்டப்பேரவை தொகுதியில் மூத்தோர், மாற்றுத்திறனாளிகளிடத்தில் தபால் வாக்கு பெறுதல் தொடங்கியது.

நாமக்கல் மக்களவை தொகுதிக்குள்பட்ட சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டப்ரேவை தொகுதியில் 85 வயதை கடந்தவர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வீட்டுக்கு சென்று தாபல் வாக்கு பெறும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டம் சங்ககிரி சட்டப்பேரவை தொகுதியில் 311 வாக்குச்சாவடி மையத்திற்குள்பட்ட 85 வயதை கடந்த 2373 பேர், மாற்றுத்திறனாளிகள் 1887 பேர் மொத்தம் 4260 பேரில் 1223 பேர் தபால் வாக்கு செலுத்த விரும்பம் தெரிவித்துள்ளனர்.

மற்றவர்கள் வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று வாக்களிக்க உள்ளனர். தபால் வாக்குப்பதிவில் ஈடுபடும் மண்டல அலுவலர்கள், நுண்ணறிவு அலுவலர்கள், உதவியாளர்கள், கேமரா பதிவு செய்பவர்களுக்கு சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நாமக்கல் மக்களவை தொகுதி உதவி தேர்தல் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான ந.லோகநாயகி தலைமை வகித்து தபால் வாக்குகளை எவ்வாறு பதிவு செய்வது அதனை எவ்வித சேதாரம் இல்லாமல் வாக்குப்பெட்டியில் சேர்ப்பது குறித்து விளக்கிக் கூறினார்.

இதனையடுத்து 1223 பேர் தபால் வாக்குகளை செலுத்துவதற்காக 25 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திற்கு ஒரு வாக்குப்பெட்டி, வாக்குச்சீட்டு, வாக்காளர்கள் வாக்களிப்பதை மற்றவர்கள் பார்க்கா வண்ணம் தடுப்பு அட்டைகளை வழங்கினர். ஏப்.5ம் தேதி தொடங்கிய தபால் வாக்குப்பதிவு ஏப்.8ம் தேதி முடிவடைய உள்ளதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story